வலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. கொரோனாவின் தாக்கத்தால் நீண்ட நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.