ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ரூ. 280 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல்.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, வாக்குச்சாவடிகளில் உச்சகட்ட பாதுகாப்பு.
கனமழை காரணமாக கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது – இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தகவல்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பிறந்த நாள் இன்று.