Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீ என்ன ஸ்டைல் காட்டுறியா” சன் கிளாஸ் எதுக்கு? யுவியை ட்ரோல் செய்த சச்சின்…!

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங்கை கலாய்த்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். தற்போது மூவரும் ஓய்வுபெற்றதால் களத்தில் அடித்த லூட்டிகளை தற்போது சமூக வலைதளங்களில் அடித்துவருகின்றனர்.அந்தவகையில், ஹர்பஜன் சிங் நேற்று முன்தினம் (18.10.2019) தனது ட்விட்டரில் சச்சின், யுவராஜ் ஆகியோருடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை நினைவுகூர்ந்தார்.

Sachin trolls Yuvraj

அந்தப் பதிவில், பழைய நல்ல நினைவுகள் என்றும் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் யுவராஜ் சிங் சன் கிளாஸ் அணிந்து கொண்டிருந்தார்.இந்தப் புகைப்படத்தை பார்த்த யுவராஜ் சிங், என் சன் கிளாஸைப் பாருங்கள் என சச்சினிடம் தெரிவித்தார். அதற்கு சச்சின் தனது ட்விட்டர் பதிவில், வீட்டிற்குள் எதுக்குப்பா சன் கிளாஸு. அதான் யுவி (UV rays) கதிர்வீச்சுக்கூட வராதே எனக் கலாய்த்துள்ளார்.தற்போது யுவராஜ் சிங்கை சச்சின் கலாய்த்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்திய அணி 2011இல் உலகக்கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sachin trolls Yuvraj

Categories

Tech |