காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.. அதில், சில காவல் நிலையங்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்.. காவல் நிலைய பெயர் பலகையில் காவல்துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும்.. புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன் பணத்தை செலவிட்டு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்..
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எந்த எந்த காவல் நிலையங்கள் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடவில்லை.. சில காவல் நிலையங்களில் பெயர் பலகையில் இதுபோல் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.. எனவே உடனடியாக இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்..