தஞ்சை மாவட்டம் மருங்குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா (27) டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமானவர். அந்தச் செயலி முடக்கப்பட்ட காரணத்தால் யூடியூப் சேனல் மூலமாக தனது வீடியோக்களை தினந்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தேனி அருகே நாகலாபுரத்தில் சேர்ந்த சுகந்தி என்பவர், திவ்யா தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து திவ்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருப்பதாக தனது வலைத்தள பக்கத்தில் திவ்யா வீடியோ பதிவேற்றம் செய்ததால், அவரை தனிப்படை போலீசார் தேடி சென்று நாவலூரில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.