திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரபலமான 7 ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி கடந்த வரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள பிரியாணி கடை மற்றும் அசைவ ஹோட்டலிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் அடுத்த வேளச்சேரி சாலையில் இயங்கி வருகின்ற காரைக்குடி பிரியாணி கடையில் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன இறைச்சி மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் கண்டறிந்தனர். அதன்படி ஓரே ஹோட்டலில் மட்டும் 45 கிலோ அழுகிய இறைச்சி கண்டறியப்பட்டுள்ளது .அதனால் அந்த கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள பிரியாணி கடைகளில் சோதனை தொடர்ந்து நடர்ந்துகொண்டு இருக்கிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.