நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைதள செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால். இவர் தமிழை தவிர தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல்அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த காஜல் தற்போது வரும் பட வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லி வருகிறாராம். ஏனென்றால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இப்படி பட வாய்ப்புகளை வேண்டாமென சொல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.