மணமகன் குடும்பத்தினர் பயணித்த வேன் விபத்துக்குள்ளாகி 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கும் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் டினிட்ரோ என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மணமகன் வீட்டார் 19 பேர் ஒரே வேனில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களது வேன் ராங்கியம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஆடு ஓன்று சென்றுள்ளது.
இதனால் ஆட்டின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மணமகன் வீட்டார் 15 பேர் காயமடைந்தனர். அதன்பின் காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.