Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து சாதக, பாதகங்களை ஆய்வு செய்து முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முக கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு அரசு பள்ளியில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |