தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories