Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே…. திமுக ஆட்சியில் இதை மட்டும் எதிர்பார்க்காதீங்க …. நயினார் நாகேந்திரன்….!!!!

நெல்லை டவுன் சந்தி வினாயகர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் கூட்டணி பலமாக உள்ளது எனவும், தேர்தல் முடிவுக்கு பின் மக்களின் இந்த மனநிலை மாறும் எனவும், திமுக ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சி தேர்தல் எப்பொழுதும் நியாயகமாக நடைபெற்றது கிடையாது எனவும் அதை மக்கள் எதிர்பார்ப்பதும் தவறு என்றும் கூறியுள்ளார்.

பாஜகவின் கூட்டணி கட்சிகளை பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விருப்பமனு போட்டியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. மேலும் பாஜக எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பதை பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், டாஸ்மாக் கடைகள் திறந்துள்ள நிலையில் தசரா விழாவிற்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும். கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்காதது இந்து விரோத போக்கை காட்டுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்டம் இயற்றபட்ட போது காங்கிரஸ் மத்தியில் இருந்தது எனவும், அப்போது திமுகவுடன் கூட்டணியில் இருந்தது. திமுக அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அரசு வேலைகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆசிரியர் ஆகியவற்றிக்கு தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. திமுக அரசு இத்தகுதி தேர்வை நீக்க முயற்சிக்காமல் மாணவர்களின் கல்வி தரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |