Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை

#tiktok -கிற்கு எதிர்ப்பு… கல்விக்காக அறிமுகமான #Edutok- கிற்கு ஆதரவு..!!

டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது.

டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது.

Image

இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான கல்விச் சார்ந்த காணொலிகள் பகிரப்பட்டுள்ளன. மக்கள் Edutok என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகளைப் பகிர்ந்துவருகின்றனர். Edutok திட்டத்தில் கல்வி மட்டுமின்றி பிட்னெஸ், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு புதுமையான காணொலி பகிரப்படும்.

Image

இத்திட்டம் குறித்து டிக்டாக் தலைமை செயல் அலுவலர் கூறுகையில், “தற்போதுவரை Edutok திட்டம் நான்காயிரத்து 800 கோடி பார்வையாளர்களைக் கடந்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார். விரைவில் மற்ற நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்ந்து பெரியளவில் செயல்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image

டிக்டாக் செயலிக்குப் பல தரப்பு மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவந்த நிலையில், கல்விக்காகத் தனித்துவமாக உருவாக்கிய Edutok அனைத்தையும் முறியடித்துள்ளது.

https://twitter.com/TikTokEduTok/status/1184430109425459200

https://twitter.com/TikTokEduTok/status/1184011114377404416

Categories

Tech |