Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விதியை மீறிய செயல்…. தப்பி சென்ற மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மினி லாரி மூலமாக அரிசி விநியோகம் செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதி கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டு மற்றும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது மதுபானங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து கனங்கூர் கிராமத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்காக சிலர் விதிமுறைகளை மீறி ஓட்டுக்காக தலா 25 கிலோ எடையுடைய அரிசி மூட்டைகளை மினி லாரியின் மூலமாக பொது மக்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.

பின்னர் காவல்துறையினரை பார்ப்பதும் அரிசி மூட்டைகளை வினியோகம் செய்து கொண்டிருந்தவர்கள் மினி லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மினி லாரி மற்றும் அதில் இருந்த 3 அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |