Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. போட்டியாளர்களுக்கு படிவம் வழங்கல்…. கலெக்டரின் செயல்….!!!

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர், கந்திலி, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி,  ஆலங்காயம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1779 கிராம உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான மனு தாக்கல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இம்மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு படிவத்தை கலெக்டர் தலைமையில் போட்டியிடும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் கலெக்டர் கூறும் போது வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகின்ற நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் ஆகியவற்றை அணிந்து வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் வேட்பாளர்கள் பின்பற்றுவது உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Categories

Tech |