இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது..
பிரதமர் மோடி பிறந்த நாளான இன்றைய தினம் நாடு முழுவதும் கோவிட் சிறப்பு முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி என்பது இன்றைய தினம் செலுத்தப்பட்டு இருக்கிறது..
இந்த கோவிட் 19 இணையதளத்தில் பதிவு செய்யக்கூடிய அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இந்த தகவல் என்பது உறுதியாகியுள்ளது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா இந்த தகவலை உறுதியுடன் கூறியுள்ளார்.. மேலும் அவர், ஒரே நாளில் அதிகபட்ச தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என பெருமிதம் தெரிவித்துள்ளார். 5 மணி அளவில் 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இதுதான் இந்தியாவில் ஒரே நாளில் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனையாகும்.
இன்னும் சில மணி நேரங்கள் இருக்கக் கூடிய நிலையில் இந்த எண்ணிக்கை என்பது இரண்டரை கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா, உத்திரபிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சிறப்பு முகாம்கள் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தமாக இந்தியாவில் 77 கோடிக்கும் அதிகமான பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசை பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் இருக்கக்கூடிய 18 வயது பூர்த்தி செய்யக்கூடிய அனைவருக்குமே முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று இலக்கு வைத்திருந்தார்கள்..
அதாவது, 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தார்கள். அந்த இலக்கு விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம்.. குழந்தைக்கான தடுப்பூசி வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும்.. 12 லிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு விரைவில் அந்த எண்ணிக்கையும் ஒரு சாதனையாக படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
மத்திய அரசு இந்த தடுப்பூசி சிறப்பு முகங்களை மாநில அரசுகள் விரிவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முகாமை வெற்றிகரமாக நடத்திய நிலையில், நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அதிகபட்சமாக ஒன்றரை கோடி தடுப்பூசி ஒரேநாளில் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..