குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லஞ்சேரி பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அய்யனார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு நபர்களும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மலட்டாறு பகுதியில் அய்யனார் அவரது கூட்டாளிகளை தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று கத்தியால் வெட்டிவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசி உள்ளார்.
பின்னர் அவர்கள் திருப்பி தாக்குதல் நடத்திய நிலையில் தேவா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது கால் தவறிக் கீழே விழுந்ததால் அவரின் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதைந்துள்ளது. இது தொடர்பாக வேல்முருகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹேமந்த், ராம்கி, அய்யனார், விநாயகமூர்த்தி, அருணாச்சலம் ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அய்யனார் என்பவர் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை சூப்பிரண்டு ரவுடி அய்யனாரை குண்டர் தடுப்பின் கிழாக கைது செய்ய பரிந்துரை செய்துள்ளார். பின்னர் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அவரின் உத்தரவின் படி காவல்துறையினர் வாலிபரை கைது செய்வதற்கான உத்தரவு நகலை மத்திய சிறைச்சாலையில் இருந்த அய்யனாரிடம் வழங்கியுள்ளனர்.