Categories
உலக செய்திகள்

ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் சிக்கிய வாகனம்.. போதைப்பொருள் கடத்திய நபர் கைது..!!

ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெனீவா மாகாணத்தின் எல்லைப் பகுதியில் உள்ள Veyrier என்ற இடத்தில் காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், ஆறரை கிலோ எடையுடைய போதைப் பொருள் சிக்கியுள்ளது. அவை ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பு கொண்ட கொக்கைன் போதை பொருட்கள் ஆகும்.

மாட்டிக்கொண்ட அந்த நபர், மாட்ரிடிலிருந்து, சூரிச்சிற்கு செல்வதாக காவல்துறையினரிடம்  கூறியிருக்கிறார். எனினும் அவரின் வாகனத்தில் ஜெனீவாவில் இருக்கும் Plainpalais என்ற இடத்தினுடைய முகவரி இருந்திருக்கிறது. இந்த போதைப்பொருள் கடத்தலில் வேறு எவரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது விசாரணைக்கு பின்பு தெரிய வரும்.

மேலும், அந்த நபர், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், தன் குடும்பத்தினரை, ஏதும் செய்து விடுவார்களோ? என்று அஞ்சி, அவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளார். எனினும், காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பல வருடங்கள், அவர் சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |