Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை…. சரமாரியாக வெட்டிய மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள ராம்தாஸ் நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்சவல்லி என்ற மனைவியும், சுமதி என்ற மகளும், அறிவுசுடர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் விவசாய நிலத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மஹாலிங்கம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் மகாலிங்கத்தின் மகன் மனநல பாதிக்கபட்ட காரணத்தினால் அவரை விவசாய நிலத்தில் சங்கிலியால் கட்டி வைத்து பராமரிப்பு வந்திருக்கின்றனர். இதில் தினந்தோறும் அறிவுசுடருக்கு தண்ணீர் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை அவரது குடும்பத்தினர் கொடுத்து வந்துள்ளனர்.

அதன்பின் வயலில் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன மணிலாவை பராமரிப்பதற்காக மகாலிங்கம் சென்றுள்ளார். அப்போது அறிவுசுடர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கத்தின் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக சுமதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அறிவுச்சுடரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |