சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை சேர்ந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்துள்ளது . இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. மேலும் மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் நடைபெற உள்ளது.
இதையடுத்து 20-ந் தேதி விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையம், 22-ந் தேதி தியாகராய கல்லூரி மற்றும் கிண்டி மெட்ரோ ரெயில் நிலையங்கள், 24-ந் தேதி ஐகோர்ட்டு மற்றும் செனாய் நகர் ரெயில் நிலையங்கள், 27-ந் தேதி புதுவண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி ரெயில் நிலையங்கள், 29-ந் தேதி அரசினர் தோட்டம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் உயரம் மற்றும் எடை பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, வெப்ப நிலை, துடிப்பு மற்றும் ஆலோசனை வளங்கப்படவுள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.