12-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று கல்யாணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மாணவி மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்சசியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெள்ளாளபாளையம் பகுதியில் வசிக்கும் பிரதீப் குமார் என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூ றி கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்தான் பிரதீப்குமார் என்பதும், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் பிரதீப்குமாரை கைது செய்ததோடு, மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.