மக்கள் எவரும் வசிக்காத கரீபியன் தீவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களுடனும் சென்று விட்டு வீடு திரும்பிய நபர்களுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
தென் அமெரிக்க நாட்டில் வசித்துவந்த chacon என்னும் தாய் அவரது குடும்பத்தோடும், நண்பர்களோடும் மொத்தமாக 9 பேர் கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின்பு வீடு திரும்புவதற்காக சிறிய படகு ஒன்றில் கடலில் பயணம் செய்துள்ளார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக படகு பெரிய அலை ஒன்றில் மோதி இயங்காமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதற்கிடையே கரீபியன் தீவுக்கு சென்ற chacon குழுவினர்கள் சொந்த இடத்திற்கு திரும்புவதற்கு முன்பாக துறைமுக அதிகாரிகளுக்கு தாங்கள் வருவதாக தகவல் கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் துறைமுக அதிகாரிகள் கரீபியன் தீவுக்கு சென்று விட்டு மீண்டும் திரும்புவதாக chacon குழுவினர்கள் சொந்த இடத்திற்கு திரும்பாததால் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து சாப்பிடுவதற்கு உணவின்றி தவித்த chacon னின் குழுவினர்களில் chacon மட்டும் தனது பிள்ளைகளுக்கு பாலை கொடுத்துள்ளார்.
ஆனால் தேவையான உணவு சாப்பிடாததால் பால் சுரக்கவில்லை என்பதால் அவர் தன்னுடைய சிறுநீரையே குடித்துள்ளார். இதனையடுத்து துறைமுக அதிகாரிகள் ஒருவழியாக chaconனின் குழுவினர்களை கண்டறிந்துள்ளார்கள். ஆனால் 9 பேர் சென்ற குழுவினர்களில் 4 பேரை மட்டுமே துறைமுக அதிகாரிகள் மீட்டுள்ளார்கள்.
இதற்கிடையே பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக தன்னுடைய சிறுநீரையே குடித்த தாய் துறைமுக அதிகாரிகள் அவர்களது படகை நெருங்குவதற்கு முன்பாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.