Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. போராட்டத்தில் ஈடுபட்ட தபால் துறை ஊழியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தபால் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-சி பிரிவு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் கோட்டத் தலைவர் அழகுமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில கவுன்சிலர் வண்ணமுத்து போராட்டத்தில் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் தமிழகம் முழுவதும் அஞ்சல் ஊழியர்களுக்கு புது வணிகம் என்ற பெயரில் இலக்குகளை நிர்ணயித்து நெருக்கடி கொடுப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் சங்கரலிங்கம், ஆவுடைநாயகம், நெல்லையப்பன், குருசாமி, முத்து பேச்சியம்மாள், ஆனந்தராஜ், வளர்மதி, சுந்தரம், நாகராஜ் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |