Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்… தமிழக அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்தது.அதற்கு பல மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது. வரி விதிப்பாக மாநில அரசுக்கு உள்ள சில உரிமைகளையும் பறிக்கக் கூடாது.ஒரு லிட்டருக்கு குறைவாக விற்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு கூடுதல் வரி விதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |