Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிய எஸ்டேட் அதிபர்…. திடீரென நடந்த கொடூர சம்பவம்…. நீதிபதி தீர்ப்பு….!!

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபரை 4 பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தவெளி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கோபி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபியை வெட்டி சென்ற 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது இந்த கொலை வழக்கு தொடர்பாக கலையரசன், சுரேஷ், பார்த்திபன், சரவணன் ஆகிய 4 பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் காரணத்தினால் அவர்கள் 4 பேரையும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |