மும்பை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஆபாச வழக்கு தொடர்பாக 1467 பக்க அளவில் உள்ள குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஹாட் ஷாட்ஸ் செயலியில் பெண்களை வைத்து ஆபாச படத்தை எடுத்து அதில் பதிவேற்றம் செய்து சம்பாதித்தது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு தலைவர் ரியான் தோர்பேயும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் போலீசார் ஆபாச பட வழக்கு தொடர்பாக ராஜ் குந்த்ரா உள்ளிட்டவர்களுக்கு எதிராக 1467 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பி இவ்விருவர்களை தவிர யாஷ் தாக்குர் என்ற அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, ராஜ்குந்த்ரா வின் மைத்துனர் பிரதீப் பாக்சி ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதீப் பாக்சி லண்டனிலும், யாஷ் தாக்குர் சிங்கப்பூரிலும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரபல நடிகை மற்றும் ராஜ்குந்த்ராவின் மனைவியுமான ஷில்பா ஷெட்டி உட்பட முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் அளித்த வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஷில்பா ஷெட்டி, ஆபாச படங்களை பதிவிட பயன்படுத்திய ஹார்ட் சார்ட்ஸ் மற்றும் பாலிவுட் செய்திகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
மேலும் ஷில்பா ஷெட்டி தனது வேலையில் கவனத்துடன் இருந்ததால் ராஜ்குந்த்ரா செய்துவந்த தொழில்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி போலீசாரிடம் மற்றொரு நடிகை ஷெர்லி சோப்ரா கூறியது என்னவென்றால் இந்த ஹாட்ஷாட்ஸ் செயலியில் ராஜ்குந்த்ரா என்னிடம் எந்த தயக்கமும் இன்றி வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இந்த ஆப்பில் சூடாக்ககூடிய வகையிலான மற்றும் ஆபாசமான வீடியோக்களில் நடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நான் அதை ஏற்க மறுத்ததாக கூறினார் இதனையடுத்து ஆம்ஸ்ப்ரைம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் “தி ஷெர்லின் சோப்ரா ஆப்” என்ற மொபைல் செயலியை தொடங்க ஒப்பந்தம் செய்து கொண்டேன் எனவும் கூறினார்.
மேலும் சவுரப் குஷ்வானா மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் என்றும் கூறினார். இந்நிலையில் சேசாஜ் ஷா என்னும் மற்றொரு சாட்சி அளித்துள்ள வாக்குமூலம் என்னவென்றால் “2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் மூன்று படங்கள் மட்டும் ஆற்றல் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டன. மேலும் குற்றவாளியான யாஷ் தாகூர் என்னை ஒரு ரீமேக் படத்தில் நடிக்க வைத்தார் எனவும் கூறியுள்ளார். அந்தப் படத்தில் ஆடை குறைப்பு, ஆபாச காட்சிகள் உள்ளதால் இந்த படம் இந்தியாவில் திரையிட படாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. எனவே யாஷ் தாக்குர் படத்தில் உள்ள ஆபாச காட்சிகளை நீக்க வலியுறுத்திய போது அதனை மறுத்து விட்டார்” என்று கூறியுள்ளார்.