சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதினால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல்களை கடத்தி வந்த இரண்டு நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன்பின் விசாரணை செய்த போது அவர்கள் லோகநாதன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல்களை கடத்தி வந்ததால் அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மாட்டு வண்டி மற்றும் மணல்களை பறிமுதல் செய்துள்ளனர்.