Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் வச்சு உடைத்து இருக்காங்க…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஏ.டி.எம்-யில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் அருகாமையில் இருக்கும் நெடுஞ்சாலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்திருக்கிறது. இதன் அருகாமையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் தாங்கள் வைத்திருந்த வெல்டிங் மூலமாக பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் ஏ.டி.எமில் இருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகி விடக்கூடாது என அதை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை நடந்த ஏ.டி.எம வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 8.50 லட்சம் ரூபாய் பணம் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |