Categories
உலக செய்திகள்

“இளம்பெண்ணை வன்கொடுமை செய்த நபர்!”.. சிசிடிவி கேமராவில் பார்த்து அதிர்ந்த பாதுகாவலர்..!!

வேல்ஸ் நாட்டில் அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக இருக்கும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்.

பிரிட்டனில் Turkey Al-Turkey என்ற 26 வயது இளைஞரும், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியும் டேட்டிங் சென்றுள்ளார்கள். அப்போது Turkey, அந்தப் பெண் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, சுய நினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த சமயத்தில், அரசு அலுவலகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் அலுவலராக பணியாற்றிய Richard Arnold, கேமராவில் அதனை பார்த்திருக்கிறார். பதறிப்போன அவர் உடனடியாக அலுவலகத்தில் இருந்த ஒலிபெருக்கியில், “அந்த பெண்ணை விடு, காவல்துறையினரை அழைக்கப் போகிறேன்” என்று கூச்சலிட்டுள்ளார். அதன்பின்பு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்பு, தன்னை யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்த அந்த நபர் எதுவும் நடக்காதது போன்று அந்த பெண்ணை அரவணைத்து கொண்டார். நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால், சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து விட்டனர். அப்போது, அந்த நபர், காவல்துறையினரிடம், “அவள் என் காதலி, தூங்கிக் கொண்டிருக்கிறாள்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு, காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். அந்தப் பெண் தெரிவித்துள்ளதாவது, “அவன் கைது செய்யப்பட்டது நல்ல செயல், அவனால் இனிமேல் எந்த பெண்ணிற்கும் பாதிப்பு ஏற்படாது” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். அதாவது இந்த பெண் சுயநினைவை இழந்ததால் தனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாமல் இருந்துள்ளார்.

கண்காணிப்பு கட்டுப்பாட்டு அலுவலர் Richard, அந்த பெண்ணிடம் நடந்தவற்றை தெரிவித்த பின்பு, தான் அந்த பெண்ணிற்கு தான் பாதிக்கப்பட்டது தெரிந்துள்ளது. இந்நிலையில், Richard அந்த காட்சி, கண்முன் அடிக்கடி தோன்றுவதாகவும், தனக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

 

Categories

Tech |