நெதர்லாந்தில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் உள்ள நெதர்லாந்தில் Almelo என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ” இந்த கத்திக்குத்து சம்பவம் நெதர்லாந்தில் உள்ள Almelo நகரின் M.th. Steynstraat-ல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதாவது காயமடைந்த நிலையில் இருந்த நபரை சந்தேகத்தின் பேரில் நாங்கள் கைது செய்து எங்கள் காவலில் வைத்துள்ளோம்” என அறிவித்துள்ளனர். இதற்கிடையில் ஒரு நபர் அவர் வீட்டின் பால்கனியில் இருந்து குறுக்கு வில்லில் சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கத்திக்குத்து சம்பவ நடந்த இடத்தில் கைது நடவடிக்கையின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வீட்டிற்குள் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கத்திக்குத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் M.th. Steynstraat இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் அங்கு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையும் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்பின் இந்த சம்பவத்தினால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது அமைதி நிலவி வருகின்றது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பால்கனியில் இருந்து குறுக்கு வில்லில் சுட்ட நபர்தான் காரணமா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.