மொறுமொறு தட்டை
தேவையான பொருட்கள் :
அரிமாவு – 1 கப்
உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் அரிசிமாவு சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும் .பின் தனியாக உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . மிக்சியில் உளுந்தம்பருப்பு , பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அரிசிமாவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் . இதனுடன் ஊறவைத்த கடலை பருப்பு ,எள் , கறிவேப்பிலை , மிளகாய்த்தூள் , பெருங்காயத்தூள் ,வெண்ணெய் ,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும் . பிசைந்தமாவை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டைகளாக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான மொறுமொறு தட்டை தயார் !!!