Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரயில் மோதியதில்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆண் சடலத்தை மீட்டு அந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதன் பிறகு சடலமாக மீட்கப்பட்ட நபர்  பெரிய சுரைக்காய்பட்டி பகுதியில் வசித்து வந்த முதியவரான சீனிபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |