கார் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையா பணி முடிந்து ஊருக்கு செல்வதற்காக சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த கார் ஒன்று ராமையா மீது மோதியது.
இந்த விபத்தில் ராமையா பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ராமாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.