Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு..!!

மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

Image result for Prime Minister Narendra Modi has discussed the 150th birthday of Mahatma Gandhi with Bollywood stars.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாமல்லபுரத்தில் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பின் போது, சீன திரைப்படமான ‘டையிங் டு சர்வைவ்’ படத்தில் இந்திய மரபுவழி மருத்துவத்தைப் பற்றிய கூறியிருப்பது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சீனா மீது ஆர்வம் அதிகரித்தது” என்று கூறினார்.

Image result for Prime Minister Narendra Modi has discussed the 150th birthday of Mahatma Gandhi with Bollywood stars.

பின் பாடலாசிரியர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிரதமர் மோடியிடம் பள்ளி பாடத்திட்டத்தில் இசையை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் நடிகர்கள் ஆமீர்கான், ஷாருக்கான், கங்கனா, சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, தாயாரிப்பாளர்கள் போனி கபூர்,ஏக்தா கபூர், ராகுல் ப்ரீத்தி சிங்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image result for Prime Minister Narendra Modi has discussed the 150th birthday of Mahatma Gandhi with Bollywood stars.

மத்திய அரசு வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேம்கார்டிங் எதிர்ப்பு மாசோதாவை (அனுமதிக்கப்படாத இடங்களில் புகைப்படங்கள், வீடியோ, செல்ஃபி எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை) கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை, நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |