Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களுக்கிடையே இருந்த முன்விரோதம்…. கல்லால் அடித்து கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் வட்டம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் மோகனுக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் மோகன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கிய ஜெய்சங்கர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் ஜெய்சங்கரின் தாக்குதலில் காயமடைந்த மோகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது குறித்து மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்துள்ளனர்.

இதனை போல் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முரளி மற்றும் மோகன் ஆகிய 2 பேரும் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராணுவ வீரரான முரளியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |