மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முனிஸ்வரன் காலனியில் பகுதியில் அனந்தப்பன் – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பதாக கூறி சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பிறகு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள வங்கியில் வைத்து மூதாட்டி அணிந்திருந்த தங்கதோடை கழற்றி பையில் வைத்துக்கொள்ளும்படி வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டி வைத்திருந்த பையை 2 வாலிபர்களும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கஸ்தூரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.