Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…. மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.  ஒவ்வொரு மாவட்டங்களிலும், தடுப்பூசி முகாம்களை நடத்தி அதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவும்,  ஆட்சியர்களுக்கு  தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், 40 ஆயிரம்  முகாம்கள்  மூலமாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த   திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.  ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது.                                                                                இது இந்திய வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.  இதையடுத்து தமிழகத்தில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்துவதற்கும், சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை ஆலோசனை நடத்தினார்.

Categories

Tech |