‘இராவண கோட்டம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இதன்பின் இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு இராவண கோட்டம் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
வெற்றிகரமாக "இராவண கோட்டம்"படப்பிடிப்பு நிறைவடைந்தது,உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி..
– விக்ரம் சுகுமாரன் pic.twitter.com/exnEoBLGp0— Vikram Sugumaran (@VikramSugumara3) September 16, 2021
இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘வெற்றிகரமாக இராவண கோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி’ என பதிவிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.