தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் மாதம் 6 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது . அதன் பிறகு சில மணி நேரங்களிலேயே 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன . தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் அல்லது பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்கு பெறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அதனை கண்காணித்து தடுப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் குழுக்களில் 1 அரசு அலுவலர், 1 போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ் என 4 பேர் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் . இந்த குழுவினர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியிலிருந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் தீவிரமான வாகன சோதனையை நடத்துவதற்கு உத்தர விடப்பட்டுள்ளது . அதன்படி பறக்கும்படை குழுவினர், நேற்று முதலே மாவட்டத்தில் உள்ள முக்கியமான சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆம்னி பேருந்துகள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பிறகே செல்ல அனுமதிக்கின்றனர் . அதன்படி விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையிலும் நில எடுப்பு தனி தாசில்தார் ராணி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதனைப்போலவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம்,பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .
Categories