மூதாட்டி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனது வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தும் திராவகத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கி கிடந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.