தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தில் கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதனால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதோ அங்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாதிப்பு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க வேண்டும். வார இறுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைத் தெருக்கள், கோவில்கள் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.