Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இன்னும் 6 மாதத்தில்… மக்களே நிம்மதியா இருங்க…!!!

கொரோனா பாதிப்பு இன்னும் 6 மாதங்களில் கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாகவும், எண்டமிக் எனப்படும் உள்ளூர் நோயாகவும் மாறி விடும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தொற்று அதிகரிக்காமல் கவனமுடன் செயல்பட்டால், 6 மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

அதற்கு பண்டிகை காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை. இந்தியாவில் கொரோனா வின் புதிய மரபணு மாற்ற பரவல் இல்லை. கொரோனாவின் மரபணு மாற்ற வைரஸ்களால் மட்டும் மூன்றாவது அலை வீசும் என கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த செய்தி மக்களுக்கு சற்று நிம்மதி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |