Categories
மாவட்ட செய்திகள்

ஐயா… “இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட காணோ ஐயா”… வடிவேலு காமெடி பாணியில்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு….!!!

மதுரை மாநகராட்சியில்,” ஸ்மார்ட் சிட்டி” பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று  அண்ணா மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல், தியாகராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை எப்படி சரி செய்யலாம் என்றும், அவை தொடர்பான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெற்று வந்தன. கூட்டம் முடிந்த பின்னர் சு வெங்கடேசன் எம்பி செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டியில், இங்கு இருந்த” கிணறு” ஒன்றை காணும் என்று நடிகர்’ வடிவேலு ‘நடித்த காமெடி பாணியில், இங்கு இருந்த இரண்டு பேருந்து நிலையங்களில் ஒன்றை காணும் என அதே காமெடி பாணியில் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுமட்டுமல்லாமல் பெரியார் பேருந்து நிலையம் நகரமைப்பு அனுமதி இல்லாமலே கட்டப்பட்டது என தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் திட்டத்தால் முதலில் இருந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் வணிக நோக்கத்திற்காக அழிக்கப்பட்டது  மட்டுமல்லாமல், தற்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

Categories

Tech |