Categories
தேசிய செய்திகள்

4 பேர் தூக்கில் தொங்க… 9 மாத குழந்தை படுக்கையில்… என்ன நடந்ததுன்னு தெரியல… அதிர்ச்சி சம்பவம்…!!!!

பெங்களூருவில் ஒரு வீட்டில் நான்கு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ஒன்பது மாத குழந்தை படுக்கையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய என்ற இடத்தில் ஒரு வீட்டில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில், 9 மாத குழந்தை படுக்கையில் பிணமாக கிடந்தது. இதில் ஒன்பது வயது குழந்தை மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |