தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு தகுதியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசு நகை கடன் தள்ளுபடி செய்த கடந்த ஆண்டு பலர் கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் வைத்து அம்பலமாகியுள்ளது. கடன் தள்ளுபடி தேர்வானவர்கள் 5 சவரன் கொண்ட வளையல்கள் ஆய்வு செய்யப்பட்டதில் நகையை துரத்தினால் தங்கமாக தெரிந்தாலும், கேரட் மீட்டர் வைத்து பரிசோதித்ததால் 22 கேரக்டாக இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவை தங்க முலாம் பூசப்பட்ட வளையல்கள் என தெரியவந்துள்ளது.