Categories
மாநில செய்திகள்

வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதனைப்போலவே நாளையும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும். இது போன்ற அசாதாரண சூழலில் தொடர்ந்து பணியாற்றி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Categories

Tech |