Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்திரன் கதை திருட்டு வழக்கு” இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…… உயர்நீதிமன்றம் அதிரடி…!!

எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு ‘இனிய உதயம்’ பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். 1996இல்தான் தான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமைச் சட்டத்தின்படி குற்றவியல் குற்றம்.

Image result for எந்திரன்

எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.இந்த வழக்கை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்காக இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் தொடுத்திருந்தார். இதையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011இல் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அந்த அழைப்பாணையை எதிர்த்து ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு செல்லாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், கதை ஒரே மாதிரி இருப்பதால் சங்கர் மீதான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.இந்த வழக்கு பத்தாண்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரரான எழுத்தாளர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.இந்த வழக்கை எழும்பூர் இரண்டாவது நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ததோடு நவம்பர் 1ஆம் தேதியன்று இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஷங்கர், ஆரூர் தமிழ்நாடன் இருவருக்கும் எழும்பூர் பெருநகர் 13ஆவது நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |