Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிக குறும்பு செய்த 5 வயது சிறுவன்…. ஆத்திரத்தில் உறவுக்கார பெண் செய்த கொடூர செயல் ….!!!!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர் .  இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை.  அதனால்  தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த,  சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.                                                                                                                                                                                                                                                                                                                இதனிடையே  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டார்த்தி இறந்துவிட்டார். அதனால்  டார்த்தியின் மகள் மேரி இரண்டு குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார .  இந்நிலையில்  நேற்று முன்தினம் குழந்தை ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டதாக கூறி அங்குள்ள   அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் . ஆனால்  சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்  .                                                                                                                                                                                                                                                                                        அப்போது  சிறுவனின் உடம்பில் தீக்காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் போன்ற காயங்கள் இருந்ததை கவனித்த மருத்துவர்கள் உடனே  காவல்துறையினருக்கு  தகவல்  தெறிவித்துள்ளனர்.  அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து   ஆபேல் தங்கை கீர்த்தியிடம் நடந்ததைப் பற்றி விசாரித்துள்ளனர் . அப்பொழுது என் தம்பியை அடிப்பதுடன்  சூடும் வைப்பார் என தெரிவித்துள்ளார் .                                                                                                                                                                                                                                                                        இதைப்பற்றி மேரியிடம் போலீசார் நடத்திய  விசாரனையில்,  சிறுவன் நிறைய குறும்புத்தனம் செய்ததால் ஆத்திரத்தில் அவனை அடிக்கடி அடித்தும், சூடுவைத்தும், கொடுமைப்படுத்தியதாகவும்,  சம்பவத்தன்று   சிறுவன் குறும்பு  செய்ததால் சுவரில்  தள்ளிய போது   மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டதாக மேரி வாக்கு மூலம் அளித்துள்ளார் .  இதனைத் தொடர்ந்து மேரியை கைது செய்து போலீசார்  நடத்தி  வருகின்றனர் . இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும்  சோகத்தையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |