Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி!!

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி..

அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. இதனால் தமிழகத்தின் 26 ஆவது புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றுள்ளார்..

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, தனபால், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் மத்திய இணையமைச்சர் எ.ல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், என பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஆர்.என். ரவி நாகலாந்து ஆளுநராக, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்துள்ளார்.. நாட்டின் உளவுத் துறையிலும் கேரளாவில் இந்திய காவல் பணியில் 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |