தலீபான்கள் அமைப்பினரை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமரிக்கா நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஓன்று தாக்கல் செய்யபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 தேதி முதல் தலீபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை அடுத்து தலீபான்கள் அங்கு புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தலீபான்கள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் அவர்கள் ஏற்படுத்தி உள்ள புதிய அரசை அங்கீகரிக்கும் உலக நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மூத்த எம்.பி-கள் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.