அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப்
சர்க்கரை – 1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
தேங்காய் பால் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு , சர்க்கரை , தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . இதனுடன் எசன்ஸ் சேர்த்து கலந்து தோசை மாவு போல கெட்டியாக கரைக்க வேண்டும் . கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அச்சு முறுக்கு தயார்..!!!